வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே....!

வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே....!

பண்ரூட்டி மற்றும் பாலூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், பண்ரூட்டி மற்றும் பாலூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படுமா என பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பண்ரூட்டி மற்றும் பாலூர் பகுதியில் கலை கல்லூரி அமைக்க போதுமான இடம் இல்லை என்றும், தற்போது நிதி நிலைமை குறைவாக இருப்பதால் காலத்தால் பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்தார்.

இதையும் படிக்க : ஜெயலலிதா சகோதரா் எனக்கூறி சொத்தில் பங்கு கேட்டு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு...!

இதனைத் தொடர்ந்து, பண்ரூட்டியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படுமா என்று வேல்முருகன் மீண்டும் கேள்வி எழுப்ப, இதற்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்லும், வேல் முருகனை எப்போதும் திருப்தி படுத்த முடியாது என்று கூறிவிட்டு, நிலம் மற்றும் நிதி கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.