தனிநீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு...புதன்கிழமை விசாரணையா?

தனிநீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு...புதன்கிழமை விசாரணையா?

அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனிநீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்த நீதிபதி, ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட எதிர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிக்க : தனிநீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை...ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பேட்டி!

இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்ற  தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவும், அதுவரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட தடை  விதிக்குமாறும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.