பக்தர்கள் அதிகமாக வருவதால் கூடுதல் பேருந்தும் விடப்படும்... சேகர் பாபு!!!

பக்தர்கள் அதிகமாக வருவதால் கூடுதல் பேருந்தும் விடப்படும்... சேகர் பாபு!!!

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறும் என்றும் அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு நேற்று மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இருக்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு வருவாய், மின்சாரம், பொது பணித்துறை, போக்குவரத்து துறை,காவல்துறை என 6 துறைகள் சார்ந்த அதிகாரிகளுடனும் ,மாவட்ட ஆட்சித்தலைவர் ,மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டருடன் நேற்று இதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.  மேலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது  நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் சித்திரை திருநாள் அன்று திருக்கோயில் திருத்தேர் சாலையில் செல்லும்போது மின்சார துறையுடன்  அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இந்த ஆண்டு சிறப்பாக மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெறும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால் கூடுதல் பேருந்தும் விடப்படும் என்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் பக்தர்கள் எந்த ஒரு பாதிப்புமின்றி திருக்கோயில் தரிசனம் மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  வழக்கை நடத்துவதற்கு மட்டுமல்ல; உண்மையை கண்டறியவும் தான்....!!!