மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு!!!

வரத்து அதிகரிப்பால், முதல் தர தக்காளி விலையே குறைந்து விட்டதால், தக்காளி வாங்கி இருப்பு வைப்போரின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு!!!

உடுமலை: திருப்பூர் மாவட்ட உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு தேவைக்கு அதிகமாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முப்பது சதவீத தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மொத்த விலையில் கிலோ, எட்டு ரூபாய்க்கும், சில்லறையில் கிலோ, பத்து ரூபாய்க்கும் தக்காளி விற்கப்படுகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தென்னம்பாளையம் மார்க்கெட்டில், 14 கிலோ எடை கொண்ட சிறிய டிப்பர், 30 முதல் 80 ரூபாய்; 26 கிலோ எடை கொண்ட பெரிய டிப்பர், 210 ரூபாய்க்கும் கிடைக்கிறது. வரத்து அதிகரிப்பால், முதல் தர தக்காளி விலையே குறைந்து விட்டதால், தக்காளி வாங்கி இருப்பு வைப்போரின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

வழக்கமாக ஓட்டல், கல்லுாரி, நிறுவனங்களில் செயல்படும் விடுதிகளில் அதிகளவில் தக்காளி வாங்கி வைப்பர். தற்போது, விலை குறைவாக இருப்பதால், தேவைக்கேற்ப மட்டும் வாங்கிக் கொள்கின்றனர்.இதனால், தக்காளி விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகிறது. முதல் நாள் தக்காளியே விற்றுத்தீராத நிலையில், மறுநாளும் தக்காளி வந்து குவிவதால், 30 சதவீத பழங்களை கழித்து, குப்பையில் கொட்ட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, விலை குறைவு, வெளியூருக்கு எடுத்துச்சென்றாலும் பயனில்லை, இருப்பும் வைக்க முடியாது என்பதால், தற்போது, விளையும் தக்காளியை விவசாயிகள் அப்படியே உழவர் சந்தைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர்.