"என்.எல்.சி. விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் பதிலளிக்க வேண்டும்" அன்புமணி வலியுறுத்தல்!!

"என்.எல்.சி. விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் பதிலளிக்க வேண்டும்" அன்புமணி வலியுறுத்தல்!!

என். எல்.சி. விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பதிலளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

விளைநிலங்களை பாழ்படுத்தும் என் எல்சி நிர்வாகத்தை வெளியேற வலியுறுத்தி நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய போது, கைது செய்யப்பட்டு நெல்லை பாளையங்கோட்டை சிறையில் உள்ள தொண்டர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.

அப்பொழுது, என். எல்.சி. விவகாரம் குறித்து தமிழக மக்களுக்கு தற்போது புரிதல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் நீர் வளம் குறைந்து போனதற்கு என். எல்.சி. நிர்வாகமே காரணம் என குற்றஞ்சாட்டிய அன்புமணி, ஒரு செண்ட் நிலத்தை கூட கையகப்படுத்த அனுமதிக்க விடமாட்டோம்  என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், "என். எல்.சி. விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்? என்று புரியவில்லை. விரைவில் அவர் பதிலளிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளார் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க || "மதுபான கடைகளைத் தவிர வேறு எங்கும் புகைபிடிக்கும் அறை திறக்க கூடாது" அரசாணை வெளியீடு!