சமூக நீதி குறித்து பேசினால் மட்டும் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் சமூக நீதியில் பின்தங்கி உள்ள வட மாவட்டங்களில், மது விற்பனை மட்டும் முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், சமூக நீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும் எனவும் சமூக நீதி குறித்து தமிழக அரசு பேசினால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும் என விமர்சித்ததுடன் பிகாரை விட மக்கள் தொகை குறைவான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை எளிதாக நடத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவிரி பிரச்சனை என்பது வெறுமனவே விவசாய பிரச்சனை மட்டுமல்ல , சென்னை உட்பட தமிழகத்தில் 22 மாவட்டங்கள் குடிநீருக்கு காவிரி நீரையே சார்ந்து உள்ளன. கர்நாடகத்தின் 4 பெரிய அணைகளையும் , மேட்டூர் அணையையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.