உடையும் நிலையில் பழமையான ஏரி.....20 கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை வெளியேற்று பணியில் அதிகாரிகள்...

திருப்பதி அருகே தொடர்ந்து பெய்த மழை காரணமாக நிரம்பிய பழமையான ஏரி எந்த நேரத்தில் உடையும் அபாயம் உள்ளதால், அதிகாரிகல் அந்த பகுதியில் உள்ள் மக்களை வெளியேற்றுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உடையும் நிலையில் பழமையான ஏரி.....20 கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை வெளியேற்று பணியில் அதிகாரிகள்...
Published on
Updated on
1 min read

திருப்பதி அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் ராயலசெருவு என்ற பெயரிலான மிக பழமையான ஏரி உள்ளது. கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நீர் முழுமையாக நிரம்பி உள்ளது.

இந்நிலையில் ஏரியின் ஒரு கரையில் நீர் கசிவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் உடையும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காளஹஸ்தி வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில் அதிகாரிகள் ஏரி அருகே உள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சொத்து பத்திரங்கள்,பணம்,நகைகள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறுமாறு அந்த கிராமங்களில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com