சாலையோரங்களில் உலா வரும் விலங்குகள்... பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து...

பருவ மழை முடிந்து பசுமை திரும்பும் முதுமலை புலிகள் காப்பகம் சாலையோரங்களில் உலாவரும் வனவிலங்குகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

சாலையோரங்களில் உலா வரும் விலங்குகள்... பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 688 சதுர கிலோ மீட்டர் கொண்ட வனப்பகுதியாகும். தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களை இணைக்கக்கூடிய இந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை புலி சிறுத்தை கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமல்லாமல் அரிய வகை பறவை இனங்களும் காணப்படுகின்றன.

வறட்சியான காலகட்டத்தில் வன விலங்குகளைக் காண்பது மிகவும் அரிது தற்போது பருவமழை பெய்து முடிந்து வனங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளன. இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் யானையுடன் கூட்டமாக காணப்படும் மான்கள் செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

குறிப்பாக பகல் நேரங்களில் மட்டும் அல்லாமல் மாலை நேரங்களிலும் அதிகமான வனவிலங்குகள் காணப்படுவது வனவிலங்கு ஆர்வலர்கள் மட்டுமன்றி சுற்றுலா பயனிகளிடையேயும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.