அண்ணா பிறந்தநாள்; எடப்பாடி பழனிச்சாமி மரியாதை!

Published on
Updated on
1 min read

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகளிர் உரிமை தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என்பது யானை பசிக்கு சோளப் பொறி போல உள்ளது என விமர்சித்தார். 

அத்துடன் பேரறிஞர் அண்ணா குறித்து அவதூராக பேசிய அண்ணாமலை, அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்தி பேசுவதை அண்ணாமலை  நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com