சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஒரு தாளுக்குத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இளநிலை செய்முறை தேர்வுக்கு 300 ரூபாயாக இருந்த தேர்வுக் கட்டணம், தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் 450 ரூபாயில் இருந்து, 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் உள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.