
சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் முழுவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன் , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சேகர்பாபு , பொன்முடி , நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.