அண்ணாமலை நடைபயணம் அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...!

அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த அண்ணாமலையின் நடைபயணம் வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. 

'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக நடைபயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 3-ம் கட்ட நடைபயணம் இன்று மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க : அமைச்சர் பேச்சில் திருப்தி அளிக்கவில்லை; தங்களது போராட்டம் தொடரும் ; ஆசிரியர் சங்கத்தினர் அதிரடி!

இந்நிலையில் நேற்றைய தினம் நடைப்பயணம் ஒத்திவைப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் உடல் நலக்குறைவு காரணமாக, அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவிருந்த  நடைபயணம் வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது. 

கடந்த மாதம் இறுதியில், கோவையில் தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.