மகளிர் இடஒதுக்கீடு மசோதா "கருத்து கூற திமுகவிற்கு தகுதி இல்லை" அண்ணாமலை கருத்து!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி 2 கட்ட பயணம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 3-வது கட்ட நடைபயணத்தை கோவை மாவட்டம் அவிநாசியில் நாளை தொடங்கவுள்ளாா். இதில் கலந்து கொள்வதற்காக அவா் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சியின் தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும், தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்ப்பதே முதன்மை பணி எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது எனவும், திமுக ஆட்சியில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத போது, பெண் உரிமையை பற்றி அந்த கட்சி பேசலாமா? எனவும் விமர்சித்தார்.

இதையும் படிக்க: "காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி புதிதல்ல" கே.எஸ். அழகிரி!