பாஜக பிரமுகர் கொலை; அண்ணாமலை கண்டனம்!

பாஜக பிரமுகர் கொலை; அண்ணாமலை கண்டனம்!

Published on

பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி பாஜக பிரமுகர் ஜெகன் நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில், திருநெல்வேலி வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர், ஜெகன் பாண்டியன் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர், அவரது குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கு நெருக்கமான மூளிகுளம் பிரபு என்ற திமுக நபரின் பெயர் காவல்துறையின் முதல் தகவலறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அன்னாமலை மூளிக்குளம் பிரபவை காப்பாற்ற திமுக முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார். 

குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற திமுக முயலுமேயானால், அது நடக்காது என திமுகவினருக்குத் தெரிவித்து உள்ள அண்ணாமலை, வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது எனவும் கூறியுள்ளார்.  

மேலும், சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சி நடக்குமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழக பாஜக சும்மா இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com