தவறு என்று தெரிந்தும் இப்படி பண்ணலாமா? உங்களுக்கு புரியாதா? அண்ணாமலை ஆவேசம்

’தவறு என்று தெரிந்தும் கூட டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசே’ என பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தமிழக அரசை கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் அதற்கு எதிரான ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை “தவறு என்று தெரிந்தும் கூட டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசே, வீழ போவது அப்பாவி பொது மக்களும், வருமான இழப்பில் வாடி கொண்டிருக்கும் நடுத்தர மக்களும்தான் என்பது உங்களுக்கு புரியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக “குடியை கெடுக்கும் திமுக” என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.