திமுக ஆட்சியின் மீது குறை சொல்லும் அண்ணாமலை, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை பற்றி வாய் திறப்பதில்லை- கே.பாலகிருஷ்ணன்

அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு கையாலாகாத நிலையில் சிக்கித் தவித்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் மீது குறை சொல்லும் அண்ணாமலை, பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை பற்றி வாய் திறப்பதில்லை-  கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், 

தமிழகத்தில் 25-ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கிறது அதனை படியெடுத்து பாதுகாக்க வேண்டும் என்றும்  மைசூரில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நடைபெற்று முடிந்துள்ள 9-மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜக, அதிமுகவின் மோசமான நடைமுறைக்கு கிடைத்த தோல்வி என்றும் கடந்த கால ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், தற்போது நடைபெறும் ஆட்சியின் நிதான செயல்பாடும், பிரச்சினைகளை அனுகும் முறைகளும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடித்தந்துள்ளது என கூறினார்.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமாக  உள்ள சுமார் 135-அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியினை வழங்குவதில் மத்திய அரசு கையாளகாத நிலையில் சிக்கி தவித்து வருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் பல அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தட்டுபாடு ஏற்படக்கூடும் என்றும் ஆகவே தனியார் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி  முன்னுரிமை கொடுத்து வழங்காமல் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுபாடு இல்லாமல் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது குறை சொல்லாமல் இருந்தால் மட்டுமே ஆச்சரியப்பட வேண்டும். திமுக ஆட்சியின் மீது குறை சொல்லும் அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. இதுவே அவரது நியாய தர்மத்தை எடுத்து மக்களுக்கு காட்டிவிடும் என்றார்.