மத அரசியல் நடத்துவது நாங்கள் இல்லை...முதலமைச்சர் தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத அரசியல் நடத்துவது நாங்கள் இல்லை...முதலமைச்சர் தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததன் மூலம் முதலமைச்சர் மத அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பூலித்தேவரின் பிறந்தநாள்:

பூலித்தேவரின் 307வது  பிறந்தநாளையொட்டி, சென்னை  தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை அறிவித்தவர் அண்ணா:

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதன்முதலாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விடுமுறை அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா எனவும், ஆனால் இன்று விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததன் மூலம் திமுக அண்ணாவின் கொள்கைகளில் இருந்து எந்த அளவுக்கு மாறி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் தான் மத அரசியல் செய்கிறார்:

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பார்ப்பேன் என அரசியல் சாசனத்தின் சாட்சியாக கையெழுத்திட்ட முதலமைச்சர், தற்போது அதற்கு எதிராக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.  பாஜக மத அரசியல் நடத்துவதாக கூறும் திமுக, தற்போது இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர் தான் மத அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com