"பவானியில், டேங்க் கட்டாமலே, கட்டியதாக ஊழல் செய்தது திமுக" அண்ணாமலை!

Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் பவானியில் செப்டிக் டேங்க் கட்டாமலே, கட்டியதாக திமுக ஊழல் செய்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 3வது கட்டத்தை தொடங்கி உள்ள அண்ணாமலை பாஜக தொண்டர்களுடன் இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பாதயாத்திரை மேற்கொண்டார். கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தில் இருந்து காவிரி ரோடு, மேட்டூர் ரோடு வழியாக அந்தியூர் சந்திப்பு வரை நடைபயணமாக சென்ற அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றபு அளித்தனர். 

பேரணி முடிவில் மக்களிடையே பேசிய அண்ணாமலை, கவுந்தபாடியின் நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுப்படும் என்றார்.

மேலும் ஈரோடு மாவட்டம் பவானியில் செப்டிக் டேங்க் கட்டாமலே, கட்டியதாக திமுக அரசு ஊழல் செய்ததாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com