"அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி" அமைச்சர் இராஜகண்ணப்பன் பேச்சு!

"அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி" அமைச்சர் இராஜகண்ணப்பன் பேச்சு!
Published on
Updated on
1 min read

அண்ணாமலை  கத்துக்குட்டி என தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் பேசியுள்ளார். 

தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இராமநாதபுரம் அரண்மனையில் உண்ணவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி எனப் பேசினார்.

தொர்ந்து பேசிய அவர், ஆளுனர் மோசமானவர் என்றும்  தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை எனவும் தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜகவினர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் திமுகவினரால் தோற்கடிக்கப்படுவர் எனக் குறிப்பிட்ட அவர்,  தோல்வி பயத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக பாரத பிரதமரின் முகம் சோகமாக உள்ளது எனக் கூறினார்.

பாஜகவின் கொத்தடிமையாக அதிமுக செயல்படுகிறது எனக் குற்றசாட்டுகளை முன்வைத்த ராஜகண்ணப்பன், மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தது திமுக அரசு தான் எனவும் கூறினார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com