சர்ச்சைக்குரிய பதில்களையே வெளியிடும் அண்ணாமலை...குற்றம்சாட்டும் சேகர்பாபு!

சர்ச்சைக்குரிய பதில்களையே வெளியிடும் அண்ணாமலை...குற்றம்சாட்டும் சேகர்பாபு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊடகம் முன்பு தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே சர்ச்சைக்குரிய பதில்களை வெளியிட்டு வருகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம்  தக்கோலம் பேரூராட்சியில் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையான கோயில் புனரமைப்பு திருப்பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு,  ஆர்.காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் திருவிழாக்களில் கிரேன் மற்றும் வினோதமான நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் முன்பு தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே சர்ச்சைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து வருகிறார். ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரி போல் சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com