"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்க தக்கது" அண்ணாமலை!

"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்க தக்கது" அண்ணாமலை!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்க தக்கது என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று நடைபெற விருக்கும் மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொழும்பு செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்காக சென்னை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோழர் சங்கரய்யாவுக்கு கௌரவப் பட்டம் கொடுக்க வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றார். இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும்  நெல்லையில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கதக்கது என கூறிய அண்ணாமலை, சாதி என்ற நச்சு பரவுவதற்கு நாமே காரணமாக இருந்திருப்பதாகவும், நச்சு செடியை ஒழிக்க வேண்டியது எல்லோருடைய கடமை எனவும் கூறினார்.

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்க தக்கது எனவும்,  புதியவர்களும் அரசியலுக்கு வந்து அவர்களுடைய கருத்தை நிலை நாட்ட வேண்டுமென்றும் தெரிவித்தார். .

இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்பது உண்மை எனவும், எல்லோருடைய கொள்கைகளையும் மக்கள் பார்த்து யார் சிறந்தவர் என்று முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் கூறினார்