"மனுசனுக்கு தான் இன்சூரன்ஸ் வேணும் சக்திக்கு தேவையில்லை": இன்சூரன்ஸ் எக்ஸ்ப்ரி ஆன காரில் பறக்கும் அன்னபூரணி!!..

இணையத்தில் வைரலாகி வரும் அன்னபூரணி பயன்படுத்தி வரும் காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

"மனுசனுக்கு தான் இன்சூரன்ஸ் வேணும் சக்திக்கு தேவையில்லை": இன்சூரன்ஸ் எக்ஸ்ப்ரி ஆன காரில் பறக்கும் அன்னபூரணி!!..

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வரும் அன்னபூரணி பற்றி பல வகையான விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில் . சிறுவண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது என்பதுபோல் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, ஊடகம் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு எனக்கு பயம் இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு சகமனிதனை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்த அன்னபூரணி திடீரென இவ்வளவு வைரலாக பேசுவதற்கான காரணம், 8 வருடத்திற்கு முன்பு  தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு அடுத்தவரின் கணவரை கவர்ந்துகொண்டு சென்றதால் தான். ஆனால் இப்போது வந்து அந்த குற்றச்செயலை  நியாயப்படுத்தும் வகையில் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வருகிறார் அன்னபூரணி.

 இந்த நிலையில்  அவர் பயன்படுத்தி வந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளன. அன்னபூரணி பழனியப்பன் என்கிற பெயரில், 2019ல் அவர் அந்த காரை வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2019 செப்டம்பர் 6 ம் தேதி, அந்த காருக்கான வாகன பதிவு நடந்துள்ளது

HDFC ERCO GENETRAL INSURANCE CO LTD நிறுவனத்தில் அவர் காருக்கான காப்பீடு எனப்படும் இன்சூரன்ஸ் பதிவு செய்துள்ளார், 2020 செப்டம்பர் 4ம் தேதியோடு அந்த இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதன் பின் அன்னபூரணி தனது காருக்கான இன்சூரன்ஸ் புதுப்பிப்பை மேற்கொள்ளவில்லை என்கிறது, ஆன்லைன் ஆவணம். அதுமட்டுமல்லாமல், குன்றத்தூரில் தான் அவர் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து தான், தனது காரில் பக்தகோடிகளை சந்தித்து வந்துள்ளார்.