10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

பத்து, 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பழைய கட்டிடங்களை இன்ம் கொண்டு அதை இடிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வில் 30 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையிலும் பாடத்திட்டத்தை குறைத்துள்ளோம் என்றும், இதற்கு மேலும் இது குறைக்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்ட  அமைச்சர், 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்பு வரும் மாதத்தில், பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com