சென்னை மாநகராட்சியின் மற்றுமொரு திமுக கவுன்சிலர் காலமானார்..!

மேலும் ஒரு கவுன்சிலர் மாரப்படைப்பால் உயிரிழந்ததால் சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள  வார்டுகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்திருக்கிறது. 

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 122 மற்றும் 165-வது,  59 வது வார்டுகள் காலியாக உள்ளது.

  சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 153 வார்டுகளில் திமுக, 15 வார்டுகளில் அதிமுக, 13 வார்டுகளில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத் தைகள் கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், 122-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன் சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் அண்மையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர்.

கடந்த 7-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தின பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் காலமானார்.

இன்று சென்னை மாநகராட்சியின் 59 வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக பிற்பகலில் உயிரிழந்தார். இதனால் சென்னை மாநகராட்சியில் தற்போது 4 வார்டுகள் காலியாக உள்ளன. இதில், 122, 165, 146, 59 வார்டுகள் காலியானதாக உள்ளது.

மாநகராட்சி மாமன்ற செயலர் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு காலியாக உள்ள 4  வார்டுகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  | "இந்த 2 பெண்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்" நேரில் ஆஜரான சீமான் ஆவேசம்!!