திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்த ராஜசுகுமார் என்பவரின் மனைவி கனகவல்லி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எனினும், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.