50 வருடத்திற்கு முன் திருடப்பட்ட சாமி சிலைகள் கண்டுபிடிப்பு..!

50 வருடத்திற்கு முன் திருடப்பட்ட சாமி சிலைகள் கண்டுபிடிப்பு..!

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை தமிழகம் கொண்டுவரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்த விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகளை மீட்டு தர கோரி விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

விசாரணை கிடைத்த க்ளூ:
 
இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாராணை மேற்கொண்டதில், திருடுபோன சிலைகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.  

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:

இதைத்தொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளை மீண்டும் தமிழகம் கொண்டு வந்து, வேணுகோபால சுவாமி கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடத்தல் தடுப்பு பிரிவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்…