மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை- திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்... அண்ணாமலை குற்றச்சாட்டு

மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை-  திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்...  அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது,  கோவை மாநகர காவல்துறை திமுகவின் கூலிப்படையாக மாறிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ள நிலையில், அரசியல் காரணங்களுக்காக திமுக நீட் தேர்வை தவறாக பயன்படுத்துவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக  நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச  ஒழிப்பு சோதனை என்பது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் விசாரணை நேர்மையாக இருக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

பின்னர் சமூக நீதி காவலர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் தலைவர்களை பற்றி தவறாக பேசுவது எங்களுடைய DNAவிலே இல்லையென பாஜக மாநில தலைவர் தெரிவித்தார்.