இன்று வேட்புமனு தாக்கல் செய்தது யார் யார்? ஓபிஎஸ் பண்ணியாச்சு...அப்போ ஈபிஎஸ்...?

இன்று வேட்புமனு தாக்கல் செய்தது யார் யார்? ஓபிஎஸ் பண்ணியாச்சு...அப்போ ஈபிஎஸ்...?

ஈரோகு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈபிஎஸ்-ஐ தவிர்த்து திமுக, அமமுக, அதிமுக ஓபிஎஸ் அணியினர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக்கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலில் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 4 வது நாளான இன்று திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இதையும் படிக்க: ஒரே வேட்பாளர்...அதுதான் பாஜாகவின் நிலைப்பாடு...!

இதைத்தொடர்ந்து, அமமுகவின் வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோன்று அதிமுக தரப்பில் இருந்து ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சின்னம் என்னவென்பது கேள்வி குறியாகாவே உள்ளது. இதற்கு முன்னதாகவே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா  நேற்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தான் உண்மையான அதிமுக  என்று சொல்லிக்கொண்டு வரும் ஈபிஎஸ் தரப்பு இன்னும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இது குறித்து ஈபிஎஸ் தரப்பு கூறும் போது, நாங்கள் வருகின்ற பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், அதிமுக தரப்பில் இருவர் போட்டியிடுவதால் யாருக்கு சின்னம் என்ற சிக்கல் ஏற்படும், ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களின் சின்னம் என்னவென்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்குமாறு ஈபிஎஸ் வழங்கிய மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. இதனால் ஈபிஎஸ் தரப்பை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.