துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு..! தனி மனிதனாய் உயிரை காத்த இளைஞர்..!

துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு..! தனி மனிதனாய் உயிரை காத்த இளைஞர்..!
Published on
Updated on
1 min read

உயிரைக் காப்பாற்றிய இளைஞர்

கடந்த டிசம்பர் 2022, 29ஆம் தேதி பழைய குற்றால அருவியில் தடாகத்திலிருந்து ஆற்றில் தண்ணீர் விழுவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழாய் போன்ற ஓடை வழியாக கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த ஹரிணி எனும் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

அப்போது சிறுமி பயந்து கூச்சலிட்டதையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது இருந்த நிலையில், அங்கிருந்த ஒரு இளைஞர் மட்டும் துணிச்சலாக ஓடும் நீரில் இறங்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை  காப்பாற்றினார்.

சிறுமியை காப்பாற்றிய இளைஞரின் பெயர் விஜயகுமார், இவர் விளாத்திகுளம் போலீஸ் லைன் பகுதியில் வசித்து வரும் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி சவாரியை ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலம் சென்ற இவர் அங்கு காரை சுற்றுலா தலத்தின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு குளிக்க சென்ற போது தான் இந்நிகழ்வு நடந்துள்ளது.

இளைஞரைப் பாராட்டிய ஆட்சியர்

நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்த அருவியில் சிறுமியை காப்பாற்ற யாரும் முற்ப்படாத நிலையில் தனி ஒரு மனிதனாய் துணிச்சலாக நீரில் இறங்கி அருவியில் தவறி விழுந்த ஹரிணியை காப்பாற்றியுள்ளார் விஜயகுமார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளாத்திக்குளம் விஜயகுமாரை அழைத்துப் பாராட்டி சான்றிதழை வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com