தேர்தல் பணிகளுக்காக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பாராட்டு...

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் பணியை துரிதமாக செய்யும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது..

தேர்தல் பணிகளுக்காக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பாராட்டு...

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 2,51,678 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் பணிகளில் நகராட்சி, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 46 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பணிகளை திறம்பட செய்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்குதல் மற்றும்  பொதுமக்களை நேரடியாக சந்தித்து தாமதம் இன்றி விரைவாக பணிகளை செய்த ஊழியர்களை பாராட்டினர். 

இந்நிகழ்வில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் தமீம் ராஜா, தேர்தல் பிரிவு தாசில்தார் வசுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறம்பட பணிகளை செய்த வாக்குசாவடி நிலைய அலுவலர்களுக்கு பாராட்டுதலும், மற்ற ஊழியர்களுக்கு ஊக்குவிப்பது தொடர்பாக ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 303 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.