
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்ததாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி, இடஒதுக்கீடு மூலமாக கல்வி வேலைவாய்ப்புகளில் பயனடைந்தவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.