அரக்கோணம்: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!!

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அரக்கோணம்: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!!
Published on
Updated on
1 min read

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற வி. கீர்த்திகா விற்கு( 448) ரூ.5 ஆயிரமும், இரண்டாம் மதிப்பெண் மாணவி சுபாஷுக்கு (441) ரூபாய் 3 ஆயிரமும், மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவன் கே.எம். குமரனுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையாக பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜி.டில்லிபாபு வழங்கினார்.

பள்ளித் தலைமையாசிரியர் ஜி.கோபி, உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன்,பெற்றோர், ஆசிரியர், கழக தலைவர் நடராஜன், துணைத் தலைவர் பசுபதி,காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தணிகை போளூர் அரசு ஆரம்ப துவக்க பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் புரவல ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜி. டில்லி பாபு மாதம் ரூ.3ஆயிரம் தனது சொந்த செலவில் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com