அரக்கோணம் : காட்சி குத்துச்சண்டை போட்டி...! 350 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு...!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் முதன்முறையாக காட்சி குத்துச்சண்டை போட்டி...!

அரக்கோணம் : காட்சி குத்துச்சண்டை போட்டி...! 350 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு...!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் ஹால் கிளப்பில் ராணிப்பேட்டை ரிங் ஃபைட் அசோசியேஷன் நடத்தும், மாநில அளவிலான காட்சி குத்து சண்டை போட்டி நடைபெற்றது. அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், வழியாக டவுன்ஹால் வரை ஒலிம்பிக் ஜோதியினை ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்தடைந்தனர். 

இந்த போட்டியின் சிறப்பு அழைப்பாளராக, 30 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வி.தேவராஜன் கலந்து கொண்டு இப்போட்டியினை துவக்கி வைத்தார். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட 14 வயது முதல் சீனியர் வரை உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் D.மதிவாணன், ஒய்வு பெற்ற அரசு மருத்துவ அலுவலர்  பன்னீர்செல்வம், அரக்கோணம் பயிற்சியாளர் பிரேம்குமார், திருவண்ணாமலை மாவட்ட பயிற்சியாளர் மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.