அதிமுக ஈபிஎஸ் அணிக்கும்...அமமுகவினருக்கும் இடையே தகராறு...கட்சி கொடியை கிழித்து மோதல்!

அதிமுக ஈபிஎஸ் அணிக்கும்...அமமுகவினருக்கும் இடையே தகராறு...கட்சி கொடியை கிழித்து மோதல்!

ஆண்டிப்பட்டியில் கட்சிக் கொடி வைப்பதில், அதிமுக எடப்பாடி அணியினருக்கும், அமமுகவினருக்கும் தகராறு ஏற்பட்டது.

அதிமுக - அமமுக மரியாதை :

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி.ஆரின் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, வைகை அணை பிரிவில் அமைந்துள்ள எம். ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க : எம். ஜி.ஆா் தேசிய தலைவரா? திராவிட தலைவரா?...தமிழிசை சொன்ன பதில் என்ன?

கட்சி கொடி கட்டுவதில் பிரச்னை :

இதனிடையே, அதிமுக கட்சியின் சார்பில் எம். ஜி.ஆர் சிலையை சுற்றிலும் கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அமமுக கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர்கள் தவச்செல்வம், சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிட்டு, அமமுக கட்சி கொடியை கட்டினார்கள்.

மோதல் :

அதற்கு பின்னால் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் தலைமையில் எம். ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, அமமுக கட்சி கொடியை கழற்றினார்கள். பிறகு எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் கீழே இறங்கியதும், அமமுகவினர் விரைந்து சென்று அதிமுக கட்சி கொடியை கழற்றி வீசினார்கள். இதனையடுத்து அதிமுக எடப்பாடி அணியினருக்கும், அமமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்கள்.