அரியலூர் : பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தீர்ப்பு...!

அரியலூர் : பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தீர்ப்பளித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி..!

அரியலூர் : பெண்ணை பாலியல்  வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தீர்ப்பு...!

அரியலூர் மாவட்டம் செங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, கிராமத்தின் வெளிப்புறத்தில் உள்ள வயல் வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இவருடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல்  வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட  பெண் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இளங்கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையில் குற்றவாளி இளங்கோவனுக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி அனந்தன் உத்தரவிட்டார்.