எப்போதுமே நான் ஆர்.எஸ்.எஸ்.தான்... வருத்தத்துடன் விலகுகிறேன் - இல.கணேசன் பேட்டி...

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

எப்போதுமே நான் ஆர்.எஸ்.எஸ்.தான்... வருத்தத்துடன் விலகுகிறேன் - இல.கணேசன் பேட்டி...

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள  இல. கணேசன் சென்னை தி நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.

குடியரசு தலைவரும், பிரதமரும் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த செய்தியை சொன்னார்கள் அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன், இதற்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினருக்கும் நியமனம் செய்த குடியரசு தலைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே மக்கள் அந்த வகையில் தமிழகத்திற்கும் மற்ற மாநிலத்திற்கும் மொழி மட்டுமே வித்தாயாசமாக உள்ளது, இதுவரை மணிப்பூர் சென்றதில்லை, முதல்முறையாக மணிப்பூர் செல்கிறேன் மக்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்கள். அடுத்த வாரம் மணிப்பூர் சென்று ஆளுநர் பதவி ஏற்க உள்ளதாக இல கணேசன் தெரிவித்துள்ளார். 

எப்போதுமே நான் RSS தான். ஆனால்  பாஜகவில் இருந்து விலகுவது வருத்தம் அளிப்பதாக அவர்  தெரிவித்துள்ளார்.