
கோவை காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளியான அசோக் குமார், இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அசோக் குமார் அவர்களை தாக்கியுள்ளார்.
இதில் மோதல் முற்றியதில், இளைஞர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர்.
இந்நிலையில் அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.