சென்னையில் மீண்டும் குறைந்தது... கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை...

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் குறைந்தது... கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட  ஆயிரத்து 941பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரேனாவினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 83 ஆயிரத்து 36 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், கொரோனா பாதிப்பில் இருந்து ஆயிரத்து 892  பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரையில் 25 லட்சத்து 28 ஆயிரத்து 209  பேர் குணம் அடைந்து உள்ளனர்.  மருத்துவமனைகளில் 20 ஆயிரத்து 399  பேர் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். 

கோவையில் 229 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 249 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 243 ஆக இருந்த நிலையில் நேற்று 217ஆக குறைந்துள்ளது.