குறைந்தது தக்காளி விலை..! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

காய்கறிகளின் விலை குறையாததால் ஏமாற்றம்..!

குறைந்தது தக்காளி விலை..! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து காரணமாக ஒரு கிலோ தக்காளி விலை சற்று குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து வர தொடங்கியிருப்பதால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையை தாண்டி விற்பனையான தக்காளியின் விலை ரூ.130 இருந்து சற்று குறைந்து ரூ.80 விற்பனையாகிறது. 

இருப்பினும் மற்ற காய்கறிகளின் விலை சொல்லிக் கொள்ளும் படியாக குறையவில்லை.  குறிப்பாக, முருங்கை 120 ரூபய்க்கும், புடலங்காய் 50 ரூபாய்க்கும், பாகற்காய், கத்தரிக்காய், தலா 60 ரூபாய்க்கு , பீன்ஸ் 90 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை அதிகரிப்பால் சாமானிய மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.