தடகள பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி...

தடகள பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தடகள பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி...

 சென்னை பாரிமுனை பகுதியில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் நாகராஜன். பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பயிற்சியாளர் நாகராஜன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.  இதில், நாகராஜன் மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.