தருமபுரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

தருமபுரி அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு பொருத்தப்பட்டிருந்த சிறுநீர் கழிக்கும் ட்யூபை, மருத்துவர் ஒருவர் வேகமாக பிடுங்கி வீசி எறிந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த ராகுல் தர்ஷன் என்பவரின்  மனைவி கீர்த்தனா பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீர்த்தனாவுக்கு பிரசவம் முடிந்ததையடுத்து இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக டியூப் பொருத்தப்பட்டிருந்தது. கீர்த்தனாவின் உடல் சீரானதை  தொடர்ந்து  மருத்துவர் உபாதை கழிக்கும் யூரின் ட்யூபை வேகமாக பிடுங்கி கட்டிலின் மேல் வீசியதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் கீர்த்தனா அலறவே, சத்தம் கேட்ட உறவினர்கள் மருத்துவரிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் என்னை கேட்பதற்கு நீ யார் என்று உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து  மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.