தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்...கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்...கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (19.02.2023) டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். இந்நிகழ்ச்சி பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கான பொதுவான அறையில் நடந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆவணப்படம் திரையிட வந்தவர்கள், அவர்களை அறையில் இருந்து வெளியேற கூறியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில்,  ”டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு பெரியார், கார்ல்மார்க்ஸ் போன்றோரின் படங்களை சேதப்படுத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கோழைகள் மீது பல்கலைக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இந்த தாக்குதல் விவகாரத்தில் டெல்லி காவல்துறை மீண்டும்  ஊமைப் பார்வையாளர்களாகவே உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com