"மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடிக்க முயற்சி" - அமைச்சர் ரகுபதி

ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்யவே ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். 

கணக்கீட்டு அறிவியலின் சர்வதேச மாநாட்டு தொடக்க விழா, சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்தார்.

இதையும் படிக்க : அயோத்திதாசப் பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு...!

தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே , ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.  

மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என வினவிய அமைச்சர் ரகுபதி, தன்னிடம் உள்ள அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுவதாகவும் சாடினார்.