பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்... சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்...

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்... சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்...

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து, சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டு வியாபாரிகளுக்கு துணி பை மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.  பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேசியதாவது,

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்கிற்கு செல்லும் போது அதை பிரிப்பது கடினமாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் உட்கொள்வதால் தினசரி ஆயிரக்கணக்கான மாடுகள், உயிரினங்கள் இறந்து விடுகின்றனர். கோயம்பேடு அங்காடியில் இதை கடைப்பிடித்தால் சென்னையில் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்.