குழந்தை பிரச்சனைகளை கண்டறிய விழிப்புணர்வு

குழந்தை பிரச்சனைகளை கண்டறிய விழிப்புணர்வு

தம்பதியனிரிடையே குழந்தை பிறப்புக்கு தடையாய் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்க தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட மகளிர் மட்டும் மகப்பேறு மருத்துவ சங்கத்தில் 170 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மருத்துவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மகப்பேறு மருத்துவம் குறித்த நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,  மருத்துவ செயல்பாடுகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சங்கத்தின் குறிக்கோளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.