இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம்...

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம்...

நவராத்திரி விழாவின் இறுதி நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை இன்று கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் தொழில்வளம் பெருக தொழில் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இதேபோல், மாணவ, மாணவிகள் தங்களது கல்வி சிறக்க வேண்டி, நோட்டு, புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபடுகின்றனர்.  

இதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளில் பூஜைகளை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையடுத்து, விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.