ஆங்கில புத்தாண்டில் பூக்குழி விழாவிற்காக கோவில்களில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்...

ஆங்கில புத்தாண்டை ஒட்டி, ஐயப்ப பக்தர்கள் திண்டுக்கல்லில் உள்ள பல கோவில்களில் குவிந்த சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டில் பூக்குழி விழாவிற்காக கோவில்களில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்...

மணக்காட்டூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் | மண்டல பூஜை விழாவையொட்டி கணபதி ஹோமம், கலச பூஜை மற்றும் படி பூஜை நடந்தது. அதையடுத்து ஐய்யப்பனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். பின், அங்கு அன்னதானமும் நடைபெற்றது, மறு புறம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடியுடன் பக்தர்கள் யாத்திரை கிளம்பினர். 

வத்தலக்குண்டு கலியுக வரதன் ஐயப்பன் கோவில் | மாரியம்மன் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஐயப்ப குருசாமிகள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினர். பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக அக்கினி குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆர் எம் காலனி மணிகண்டன் கோவில் | வருடந்தோறும் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு இந்தாண்டு, 42வது மண்டல பூஜை நடைபெற்றது. இதனையடுத்து, அதிகாலை கணபதி ஹோமம்,  பூக்குழி இறங்கும் வைபவம், பூக்குழிக்கு சிறப்பு பூஜைகளுக்கு அடுத்து, ஐயப்ப பக்தர்கள் பூக்கிழியில் இறங்கினர். பின் அன்னதானமும் நடைபெற்றது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com