திரையிடப்பட்ட மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்...

திரையிடப்பட்ட மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்...
Published on
Updated on
1 min read

கடந்த வாரம் குஜராத் மதக்கலவரம் தொடர்பாக BBC தொலைக்காட்சி சார்பில் INDIA The Modi Questions என்ற பெயரில் ஆவணப்படம் வெளியானது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் அந்த ஆவணப்படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இந்த ஆவணப்படம் பொதுமக்களின் பார்வைக்காக பெரிய LED திரையில் திரையிடப்பட்டது.

இதனை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் மற்றும் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

மேலும் இந்த ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com