தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பாஜக முன்னேற்றம்...மத்திய இணை அமைச்சர் பேச்சு!

தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பாஜக முன்னேற்றம்...மத்திய இணை அமைச்சர் பேச்சு!
Published on
Updated on
1 min read

தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பாஜக முன்னேறி கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் கிருஷ்ணராவ் கரத் தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி இணை அமைச்சர் கிருஷ்ணாராவ்கரட் பங்கஜ்சவுத்ரி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார். ஒன்றிய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை வளர்ச்சி அடையாத மாவட்டங்களாக அறிவித்ததில் விருதுநகர் மாவட்டமும் அடங்கும். இந்த மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு வாக்காளருக்கும் அறியச் செய்து, குடிமக்கள் அனைவருக்கும் ஒன்றிய அரசின் வளர்ச்சி திட்டங்கள் சென்றடைய செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்ந்து, பாஜக குடும்ப அரசியல் பண்ணவில்லை என்று தெரிவித்த அவர், பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் என நாம் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளதால் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் திமுகவை விமர்சித்து பேசினார். அதேசமயம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றிக்கனியை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதே நமது லட்சியமாகும் என்று உரக்க சொன்னார்.

உலகிலேயே அற்புத கலாச்சாரம் கொண்ட இந்தியாவை அழித்தது சோனியா குடும்பம் தான் என சாடிய அவர், கடந்து 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாடு விரைவாக வளர்ச்சி பெற்று உள்ளதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் உலக அளவில் நமது தேசம் மிகப் பெரிய அளவில் மரியாதை பெற்றுள்ளது.  இதனைத்தொடர்ந்து, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னேறிக் கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் கிருஷ்ணராவ் கரத் தெரிவித்துள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com