பாஜகவின் புதிய பதவியில் இயக்குனர் பேரரசு...!

பாஜகவின் புதிய பதவியில் இயக்குனர் பேரரசு...!

இயக்குனர் பேரரசுவிற்கு பாஜகவில் புதிய பதவியை  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பேரரசு பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக ஊர் பெயர்களை திரைப்படத்தின் பெயர்களாக வைத்து பிரபலமானவர். மேலும் மலையாளத்திலும் படங்களை இயக்கியவர், கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பேரரசு சமீப காலமாக பொதுத் தளங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், தமிழ் வளர்ச்சியை பற்றியும், தமிழ் பாடம் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் சமூக கருத்துக்களை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், பாஜக வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவராக இயக்குநர் பேரரசு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கலை, கலாச்சார பிரிவு கௌரவத் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவருக்கு  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக வெளிநாடு - அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவராக நியமித்துள்ளார். 

இதையும் படிக்க : ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி...! இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்...?